இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, செப்டம்பர் 7ஆம் தேதி விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க முயன்றது. துரதிஷ்டவசமாக கடைசி நொடியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இஸ்ரோக்கு விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தையும் அதன் உடைந்த பாகங்களையும் கண்டறிந்துள்ளதாக நாசா ட்வீட் செய்துள்ளது. இதற்கு ஷான் ராபின்சன் எனும் இந்தியப் பொறியாளர் உதவியுள்ளார்.
விக்ரம் லேண்டரை கண்டறிய உதவியதற்காக நன்றி தெரிவித்து நாசா அனுப்பிய கடிதத்தை ஷான் தன் ட்விட்டர் பக்கத்ததில் பதிவிட்டுள்ளார்.
அதில், "விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியை கண்டறிந்து நாசாவுக்கு தகவல் அளித்தமைக்கு நன்றி. நீங்கள் அளித்த தகவின் அடிப்படையில் LROC-குழு விக்ரம் லேண்டர் விழுந்த இடம், அதன் உடைந்த பாகங்களை கண்டறிந்துள்ளது.
விக்ரம் லேண்டரை கண்டறிந்துகொடுத்த பெறுமை உங்களைச் சேரும்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது இவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.