ETV Bharat / bharat

பிழைப்புக்காக வந்த மக்கள் மீது ரசாயனத்தைப் பீய்ச்சி அடித்த கொடூரம்!

பரேலி: பல்வேறு மாநிலங்களிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காக உத்தரப் பிரதேசம் வந்த தொழிலாளர்கள் மீது ரசாயனம் கலந்த கிருமிநாசினியைப் பீய்ச்சி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chemical-rain
chemical-rain
author img

By

Published : Mar 31, 2020, 12:04 AM IST

கரோனாவின் தாக்கத்தால் உத்தரப் பிரதேச மாநிலம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரமான பரேலியில் நேற்று ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அந்த நகரின் அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்புத் துறையினர் கிருமிநாசினி மருந்தை தெளித்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக அங்குள்ள ஒரு பேருந்து நிலையத்தில் தீயணைப்புத் துறையினர் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது பிழைப்புக்காக டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து பரேலி வந்து குடும்பத்தோடு வசித்துவந்த தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளோடு அப்பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து தீயணைப்புத் துறையினர் அவர்கள் அனைவரையும் வரிசையாக அமர வைத்து கண்களை மூடச் சொல்லி இரக்கமில்லாமல் ரசாயனம் கலந்த கிருமிநாசினியை அவர்கள் மீது பீய்ச்சி அடித்தனர். ரசாயனத்தால் கண் எரிச்சல் ஏற்பட்டதாக அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

சொந்த மாநில மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்காத அரசுக்கும், பிழைப்புக்காக தங்கள் மாநிலத்துக்கு வந்த மக்களை அகதிகளைப் போல் நடத்தும் அரசுக்கும் எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக பரேலி மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வேலைக்குச் சென்ற மக்கள் உண்ண உணவில்லாமல் தங்களின் சொந்த ஊருக்கு நடைபயணமாக வந்தது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது மத்திய, மாநில அரசுகளின் அலட்சிய போக்கை காட்டுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: இத்தாலியில் 24 மணி நேரத்தில் 812 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.