தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் 1591ஆம் ஆண்டு முகமது குலி குதுப் ஷாவால் கட்டப்பட்டது சார்மினார். இது ஹைதராபாத்திற்கும் முக்கிய அடையாளமாக திகழ்கிறது.
தற்போது 428 வயதாகும் இந்த வரலாற்றுச் சின்னத்தை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் புதுப்பித்துவருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு சார்மினாரின் ஒரு தூணின் பாகமொன்று சேதமடைந்து கீழே விழுந்தது. அப்போது அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
சார்மினார் என்றால் என்ன?
ஹிந்தியில் 'சார்' என்றால் நான்கு, 'மினார்' என்றால் தூண் என்று பொருள்படும். அதன்படி, நான்கு தூண்களால் ஆனதே சார்மினார் என்றழைக்கப்படுகிறது.