ETV Bharat / bharat

காவல்துறையின் எச்சரிக்கையை மீறி தேர் திருவிழா! - கரோனா வைரஸ்

பெங்களூரு: குல்பர்கா மாவட்டத்தின் ராவூர் கிராமத்தில் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி, சித்தலிங்கேஸ்வரா கோயில் தேரை இழுத்து அப்பகுதி மக்கள் திருவிழா கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chariot-enthusiasts-held-for-lockdown-violation-in-karnataka

author img

By

Published : Apr 17, 2020, 9:01 PM IST

Updated : Apr 17, 2020, 9:12 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு எதற்காகவும் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மக்கள் பொதுவெளியில் கூடாதவாறு நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகள், கோயில் திருவிழாக்கள் என அனைத்து நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவும் நடைபெறுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி, கோயில் தேர் இழுத்து திருவிழா கொண்டாடப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ராவூர் கிராமத்தில் அமைந்துள்ளது சித்தலிங்கேஸ்வரா கோயில். ஒவ்வொரு வருடமும் இந்தக் கோயில் திருவிழா அக்கிராமத்தினரால் விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாக திருவிழா நடத்த வேண்டாமென காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.

இதற்கு ஊர் கிராம மக்களும் ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசின் உத்தரவை மீறி, நேற்று காலை திடீரென கோயில் தேரை இழுத்து அப்பகுதி மக்கள் திருவிழா கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதுகுறித்து குல்பர்கா காவல் கண்காணிப்பாளர் லதா பார்டினிடம் பேசுகையில், ''நாங்கள் கோயில் திருவிழாவை நடத்த வேண்டாம் என ஏற்கனவே அக்கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தோம். அதையும் மீறி கோயில் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிலரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம்'' எனத் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் குறித்து ஊடகங்களும், அரசும் நாள்தோறும் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், மக்கள் எவ்வித அச்சமுமின்றி திருவிழாக் கொண்டாடியது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உலகப் பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் திருவிழா முதல்முறையாக ரத்து!

Last Updated : Apr 17, 2020, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.