டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் தாஹிர் ஹுசைன், இவரது சகோதரர் மற்றும் 15 பேர் மீது சிறப்பு புலனாய்வு காவல் பிரிவினர் கர்கர்டூமா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வடகிழக்கு டெல்லியில் சந்த் பாத் பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக இந்த குற்றப்பத்திரிக்கையானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1000 பக்கம் உள்ள குற்றப்பத்திரிகையில், சாட்சிகளின் அறிக்கையும், தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையிலும் அனைத்து தகவல்களும் அடங்கியிருப்பதாக, டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையின் போது தலைமை காவலர் தீபக் தஹியா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஷாருக் பதான் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.