மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அனைத்து துறைகளிலும் மாற்றம் மேற்கொண்டதன் மூலம் வளர்ச்சியினை உறுதி செய்துள்ளோம் என தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில், 7 புதிய ஐஐஎம்கள் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக நாட்டிலேயே மொத்தமாக 13 ஐஐஎம்கள் தான் இருந்தன. அதேபோல், 70 ஆண்டுகளில் 7 எய்ட்ஸ் மருத்துவ மனைகள் மட்டுமே நாட்டில் இருந்தன. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அது இரட்டிப்பானது. 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன அல்லது அதனை தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்துத் துறைகளிலும் மாற்றம் மேற்கொண்டு வளர்ச்சியை உறுதி செய்ததன் மூலம் இந்தியாவுக்கான பத்தாண்டுகளாக மாறிவிட்டது. கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களில், எந்த அளவில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். வேளாண், விண்வெளி, பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, தொழிலாளர் என பல்வேறு துறைகளில் மாற்றம் மேற்கொண்டதன் மூலம் வளர்ச்சியை கண்டுள்ளோம்.
அடித்தளத்தை உறுதிப்படுத்தினால் மட்டுமே இந்த பத்தாண்டுகளை இந்தியாவுக்கானதாக மாற்ற முடியும். இந்த பத்தாண்டுகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு பெருகியுள்ளது" என்றார்.