ஹரியானா மாநிலம் ரோடாக்கில் பாஜக பேரணி ஒன்றில் கலந்துகொண்டு தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "ஜம்மு-காஷ்மீர் பிரச்னையாக இருந்தாலும் சரி, தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையாக இருந்தாலும் சரி 130 கோடி இந்தியர்களும் புதிய தீர்வுகளை காணத் தொடங்கிவிட்டனர்.
செப்டம்பர் 7ஆம் தேதி நள்ளிரவு 1:50 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை காண ஒட்டுமொத்த இந்தியாவும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தது. அந்த 100 நொடிகளில் நடந்த சம்பவத்தால் நாடே விழித்துக்கொண்டதைப் பார்தேன். சந்திரயான் 2 திட்டம் நாட்டை ஒன்றிணைத்துள்ளது.
விளையாட்டு வீரர்களின் உத்வேகம் குறித்தும் போசுவது போல, இஸ்ரோவின் உத்வேகம் குறித்து இந்தியா தற்போது பேசிவருகிறது" என்றார்.