திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்காகச் சென்ற இஸ்ரோ தலைவர் சிவன், சாமி தரிசனத்திற்கு பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘சந்திராயன் 2 விண்கலத்தை வரும் திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்த உள்ளோம். அதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
திட்டமிட்டப்படி சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும். மழை பெய்தாலும், விண்கலம் ஏவப்படுவதில் எந்த பாதிப்பும் இருக்காது’ என்றார்.
மேலும், சந்திராயன்-2 விண்கலம் மழையால் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டது எனவும் சிவன் கூறியுள்ளார்.