இது குறித்து இஸ்ரோ, "நாட்டின் இரண்டாவது நிலவு விண்கலமான சந்திரயான்-2 கடந்தாண்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்படி இன்று (ஆக. 21) சந்திரயான்-2 தனது ஓராண்டை நிறைவு செய்துவிட்டது.
நிலவின் சுற்றுப்பாதையில் இதுவரை சந்திரயான்-2 நான்காயிரத்து 400 முறை சுற்றிவந்துள்ளது. அதன் அனைத்துப் பாகங்களும் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. அது நிலவின் சுற்றுப்பாதையை அடைந்ததிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை செயல்பட போதுமான எரிபொருள் உள்ளது.
மேலும் சந்திரயான்-1 நிலவின் மேற்பரப்பு நீர் இருப்பு, துருவ பனி இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வுசெய்தது. சந்திரயான்-2 இன்னும் விரிவாக நிலவின் உண்மையான மேற்பரப்பு தோற்றம், நீர் ஆதாரங்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய பயன்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'நிச்சயம் ஒரு நாள் இஸ்ரோ நிலவுக்கு மனிதர்களை அனுப்பும்' - சிவன் உறுதி