அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் தொடர்ச்சியான ரயில் மறியல் பேராட்டம் காரணமாக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு எல்பிஜி, ஆடைகளை அனுப்புவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் இரண்டுமே இயக்கப்பட வேண்டும், மேலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடன் பேசுவது மாநில அரசின் முதன்மைப் பொறுப்பாகும்" என்றும் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 122 எல்எம்டி நெல் விற்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 158 எல்எம்டி நெல்லை விவசாயிகள் விற்றுள்ளனர். இது வளர்ச்சியைக் குறிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சரக்கு ரயில்களின் ஓட்டுநர்களின் பாதுகாப்பு குறித்து ஜவடேகர் கவலை தெரிவித்தார்.
"மாநில அரசுகள் விவசாயிகளுடன் பேசி, ரயில் மறியல் போராடங்களைக் களைந்து, ரயில் சேவைகளை மீள்தொடக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இப்போது குளிர்காலம் தொடாங்கிவிட்டது. எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு தேவையான எல்பிஜி, உடைகள் மற்றும் பிற பொருள்களை அனுப்புவதில் ரயில் மறியல் காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. இது நல்ல விஷயம் அல்ல "என்று ஜவடேகர் கூறினார்.
இதற்கிடையில், பஞ்சாப், ஹரியானாவின் பல பகுதிகளில் 32 இடங்களில் விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தினால் மத்திய அரசிற்கு 1,200 கோடி ரூபாய் வரை வருவாயை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் வழியாகச் செல்லும் அனைத்துப் பயணிகள் ரயில்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஆயிரத்து 350க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் விடப்படும் உள்ளன.
முன்னதாக, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், பஞ்சாப் மாநிலத்தில் ரயில் சேவைகள் இயல்பான முறையில் இயங்க ஆவண செய்யவும், ரயில்வே ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யவும்கோரி கடந்த அக்டோபர் 26ஆம் தேதி பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அன்மையில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.