இணையதள குற்றங்களை தடுக்க சமூக வலைதளங்களை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று ஆண்டனி க்ளைமெண்ட் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்கள் தங்களின் கருத்துகளைப் பகிர தளம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு, அந்த கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தனர்.
காட்சி ஊடகங்களைக் கண்காணிப்பது போல், சமூக வலைதளங்களை கண்காணித்தால் என்ன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அப்போது அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிப்பது போல் வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது, சமூக வலைதளங்களை ஆதாருடன் இணைப்பது, பழைய விதிகளை மாற்றியமைப்பது, புதிய விதிகள் கொண்டு வருவது தொடர்பாக 3 மாத கால அவகாசம் தேவைப்படுவதாக மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் போலி செய்திகள் அதிகமாக பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடர் கொலையாளி ஜோலி வழக்கு: நிபந்தனை பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு!