கேரளாவில் என்.எஸ்.எம்.இ தொழிற்கூடங்கள், முடிதிருத்தகங்கள், உணவகங்கள், நகரட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறு, குறு தொழில்கள், நகரங்களில் குறைந்த தொலைவுக்கு பேருந்து போக்குவரத்து ஆகியவற்றிற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், கேரள அரசின் இந்த ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள், மத்திய அரசின் வழிகாட்டுதல் உத்தரவுகளை மீறுவது, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யக் கூடியது என மத்திய உள்துறை அமைச்சகம், கேரள அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா: கேரளாவில் ஊரடங்கில் சில தளர்வுகள்