ETV Bharat / bharat

சட்டத்தை திரும்பபெற்றால் மட்டுமே வீட்டுக்கு திரும்பி செல்வோம் - விவசாயிகள் உறுதி

author img

By

Published : Jan 8, 2021, 5:17 PM IST

Updated : Jan 8, 2021, 6:26 PM IST

பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை

17:15 January 08

டெல்லி: மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையேயான எட்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில், அடுத்துக்கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர். 44 நாள்களாக நடைபெற்றுவரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று மத்திய அரசு எட்டாம்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது, வேளாண் சட்டங்கள் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கு மட்டும் நிறைவேற்றப்படவில்லை, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொருந்தும் என மத்திய அமைச்சர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.  

அச்சட்டங்களுக்கு எதிராக மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் நிறைவேற்றப்படும் என விவசாயிகள் அவர்களின் நிலைபாட்டில் உறுதியாக இருந்தனர். இந்நிலையில், எந்த வித முன்னேற்றமும் ஏற்படாமல் இழுபறி நீடித்ததைத் தொடர்ந்து, அடுத்துக்கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  

சட்டத்தை திரும்பபெற்றால் மட்டுமே வீட்டுக்கு திரும்பி செல்வோம் என விவசாயச் சங்க தலைவர் ஒருவர் கூட்டத்தில் தெரிவித்தார். விவசாயம் மாநில பட்டியலில் இருப்பதாக பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் சுட்டிகாட்டப்பட்டுள்ளதாகவும் எனவே மத்திய அரசு அதில் தலையிடக்கூடாது எனவும் மற்றொரு விவசாய தலைவர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஒன்று சேர்ந்து வெற்றிபெறுவோம் அல்லது செத்துமடிவோம் என விவசாயி ஒருவர் மேஜையில் எழுதிவைத்திருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Last Updated : Jan 8, 2021, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.