மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று இரண்டாவது முறையாக மோடி பிரதமரானார். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவின்போது 57 மத்திய அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூன் 17ஆம் தேதி தொடங்கி ஜூலை 26ஆம் தேதி வரை நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். அதற்காக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
தற்போது பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் இன்று மாலை நான்கு மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.