நாட்டின் 87ஆவது விமானப்படை தினத்தை முன்னிட்டு, டெல்லியிலுள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படைத் தளபதிகளும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் பதாரியா, ”பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முந்தைய அரசுக்கும் தற்போதைய அரசுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஏனென்றால் புல்வாமா தாக்குதலுக்கெதிராக நமது விமானப்படை நிகழ்த்திய பாலக்கோட் தாக்குதலுக்கு, மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவே காரணமாகும்.
40 பாதுகாப்புப் படை வீரர்களின் மரணத்திற்குக் காரணமான பயங்கரவாத கும்பலுக்கு பாலக்கோட் தாக்குதல் மூலம் தண்டனை கொடுத்ததில் மத்திய அரசுக்கு முக்கிய பங்கு இருக்கிறது” என்றார்.