நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடக்க கூடாது என்பதற்காக அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. குறிப்பாக இந்திய எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இருந்தபோதிலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊரி, ராஜவுரி ஆகிய பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.