இந்தியா - பிரான்ஸ் இணைந்து ஜோத்பூர் அருகே ஐந்து நாள் மெகா விமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த பயிற்சி இரு நாடுகளின் ரஃபேல் ஜெட் விமானங்களும் சிக்கலான சூழ்ச்சிகளில் செயல்படுவதற்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. 'எக்ஸ்-டெசர்ட் நைட் 21' என பெயரிடப்பட்ட இந்தப் பயிற்சிக்காக, இந்திய விமானப்படையானது நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்னணி விமானங்களையும் இந்தியா-சீனா எல்லை பகுதியான கிழக்கு லடாக்கில் உள்ளது. இரண்டு விமானப்படைகளும் முன்னணி போர் விமானங்களையும் போக்குவரத்து மற்றும் டேங்கர் விமானங்களையும் பயிற்சியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், இந்தியா-பிரான்ஸ் கூட்டுப்பயிற்சியின் போது, ரபேல் விமானத்தில் பறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வீரர்களுக்கு போர்க்களங்கள் பற்றியும், கூட்டுப் பயிற்சி எவ்வாறு இரு நாடுகளின் விமானப் படைகளுக்கிடையேயான இயங்குதளத்தை மேம்படுத்துகிறது என்பதையும் குறித்தும் பிபின் ராவத் விளக்கவுள்ளதாக இந்திய விமானப்படை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இருநாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பிரெஞ்சு மற்றும் இந்திய விமானப்படைகள் கடந்த பல ஆண்டுகளாக கருடா பயிற்சிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.