நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக லாக்டவுன் அறிவித்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. குறிப்பாக சிறுகுறு நிறுவனங்களின் இயக்கம் முடங்கியுள்ளதால் அதன் செயல்பாடுகள் சிதையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் 70 விழுக்காடிற்கும் அதிகமான வேலைவாய்ப்பு சிறுகுறு நிறுவனத்தை நம்பியுள்ளதால் அவற்றை பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அந்நிறுவனங்களுக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி மற்றும் சுங்க வரிகளின் நிலுவைத் தொகையை தற்போது மத்திய மறைமுக வரி ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து ஆணையம் தனது ட்விட்டர் பதிவில், ஜி.எஸ்.டி வரி செலுத்தும் சிறுகுறு நிறுவனத்தினரை பாதுகாப்பதில் உறுதிகொண்டுள்ள நாங்கள், 10 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் சிறுகுறு நிறுவனங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரிலையன்ஸ் நிறுவனத்தின் 6.43% பங்குகளை வாங்கிய எச்.டி.எஃப்.சி வங்கி