ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற மூத்த ஐஆர்இஎஸ் அலுவலரை சிபிஐ கைது செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 20 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
1985 ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐஆர்இஎஸ் அலுவலரான மகேந்திர சிங் சவுகான், வடகிழக்கு முன்னணி ரயில்வே ஒப்பந்தங்களை குறிப்பிட்ட நபர்களுக்கு அளிக்க சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவரை சிபிஐ கைது செய்துள்ளது.
இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், "அசாம் மாநிலம் மாலிகானில் உள்ள தலைமையகத்தில் மகேந்திர சிங் சவுகான் பணியாற்றிவருகிறார். அவரிடமிருந்து லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி, அசாம், உத்தரகாண்ட் மற்றும் இரண்டு மாநிலங்களில் உள்ள 20 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது" என்றார்.