டெல்லி ரோஹிணியில் உள்ள விஜய் விஹார் காவல் நிலையத்தில் இடப் பிரச்னை காரணமாக ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார். அவரிடம் ஸ்டேஷன் ஹவுஸ் அலுவலர், பத்ரி, ஜிதேந்திரா ஆகியோர் ஐந்து லட்சம் கையூட்டாகக் கேட்டுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த சிபிஐ அலுவலர்கள் அவர்கள் மூவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கையூட்டு கேட்டதை ஒப்புக்கொண்டனர்.
மேலும், முன்பணமாக இரண்டு லட்சம் ரூபாய் வாங்கியதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.