சித்தூர் (ஆந்திரா) : சேவல் சண்டையைப்போலவே சித்தூரில் மஞ்சுவிரட்டு நிகழ்வும் புகழ்பெற்ற ஒன்றாகும். ஆனால், அங்கு விடப்படும் காளைகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டுகளில் பயன்படுத்தப்படும் காளைகளே.
ஆந்திராவில் தமிழர்கள் மிகுதியாக வாழும் சித்தூரில் ஆண்டுதோறும் ஜனவரி 15ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். சங்கராந்தி விழாவின் இறுதிநாளான கனுமா விழாவில் (காணும் பொங்கல்) மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்காக சித்தூரில் இருந்து காளைகள் வாங்கி வரப்படுவது வழக்கம். இதனால், சித்தூரில் இரண்டு மாதங்களுக்கு முன்பே மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது.
ஆனால், இது பழைய பழக்கத்தை மாற்றுகிறது எனவும், சங்கராந்தி அன்றே இந்த விழாவை நடத்தவேண்டும் என்றும் இப்பகுதியில் உள்ள முதியவர்கள் தெரிவிக்கின்றனர். மஞ்சுவிரட்டு நடத்துவது சட்டவிரோதமானது எனக் காவல் துறையினர் பல கட்டுப்பாடுகளை ஆந்திராவில் விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேலூரில் மஞ்சுவிரட்டு: பல்லாயிரக்கணக்கானோர் ஆவலுடன் கண்டுகளிப்பு