மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி செய்யப்படும் என அனைத்திந்திய பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அஜய் பன்சால் கூறுகையில்,
"தேர்தல் ஓட்டுப்பதிவு நாளன்று வாக்களிக்கும் மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலையிலிருந்து லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி செய்யப்படும். வாக்களிப்பவர்களின் விரலில் மை இருந்தால் மட்டும்தான் இந்த சலுகை வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.