கோவிட் 19 வைரஸ் தொற்று தற்போது இந்தியாவில் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது ஒருபுறமிருக்க, கோவிட் 19 வைரஸ் தொற்று குறித்த தவறான தகவல்களும் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவிவருகின்றன.
இதையடுத்து, கோவிட் 19 வைரஸ் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்த மத்திய அரசு, அவ்வாறு தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்தது.
இந்நிலையில், கோவிட் 19 வைரஸ் தொற்று குறித்து வாட்ஸ்அப் குழுவில் தவறான தகவல்களைப் பரப்பியதற்காகக் குற்றஞ்சாட்டி, ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம் 54இன் (தவறான எச்சரிக்கை தருவது) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் இதுவரை நான்கு பேருக்கு கோவிட் 19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா -இந்தியாவுக்குள் நுழைய தடை!