அண்மையில் மத்திய அரசு, நிர்வாக ரீதியாக சிறந்த மாநிலங்கள் பட்டியலை வழங்கியது. இதில் பஞ்சாப் மாநிலம் கடைநிலைக்குத் தள்ளப்பட்டது. முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் மோசமான நிர்வாகத் திறனுக்கு கிடைத்த பரிசு இதுவென்று பொருள்கொள்ளும்படியாக முன்னாள் முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்குப் பதிலளித்த அமரிந்தர் சிங், “மத்திய அரசு வழங்கிய நிர்வாகப் பட்டியல் விவகாரத்தில் மாநில மக்களை சுக்பீர் சிங் தவறாக வழிநடத்த முனைகிறார். சிறந்த அரசாங்கம் குறித்து சுக்பீர் சிங் பாதல் அறியவில்லை போலும். கடந்த பத்தாண்டுகளாக பஞ்சாப்பில் சுக்பீர் சிங் பாதலின் சிரோன்மணி அகாலிதளம் - பாஜக கூட்டணி அரசாங்கம் நடந்தது.
இந்த நிர்வாகப் பட்டியல் 2014ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை எடுத்த தரவுகளின் அடிப்படையிலானது. பட்டியலில் மாநிலம் மோசமான நிலைக்குச் செல்ல சிரோன்மணி அகாலிதளம் - பாஜக கூட்டணி அரசாங்கமே காரணம். எனவே சுக்பீர் சிங் மத்திய அரசு வழங்கியுள்ள நிர்வாகப் பட்டியலை, சிறிது நேரம் ஒதுக்கி அவர் படிக்க வேண்டும். அதன் பின்னர் அரசை விமர்சிக்க வேண்டும். இதுபோன்ற அவமானகரமான பொய்களை மீண்டும் ஒருமுறை கூற வேண்டாம். மேலும் தற்போதைய அரசு மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்” எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் சிறப்பான ஆட்சியை சீன அதிபரே பாராட்டியுள்ளார்’ - காமராஜ்