17ஆவது மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள பாஜக, மீண்டும் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது. இதற்கான அமைச்சரவை பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மே 30ஆம் தேதி மாலை நடைபெற்றது.
கடந்த முறை மோடி பிரதமராக பதவியேற்ற விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், இந்த முறை பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். இவர்கள் மட்டுமல்லாது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், அம்பானி, டாடா உள்ளிட்ட முக்கிய தொழிலதிபர்களும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவியேற்றுக்கொண்டனனர்.
கேபினட் அமைச்சரவை பட்டியல்:
- ராஜ்நாத் சிங்
- அமித் ஷா
- நிதின் கட்கரி
- சதானந்த கவுடா
- ராம்விலாஸ் பாஸ்வான்
- நிர்மலா சீதாராமன்
- நரேந்திர சிங் தோமர்
- ரவிசங்கர் பிரசாத்
- ஹர்சிம்ரத் கவுர் பாதல்
- தவார்சந்த் கெலாட்
- எஸ். ஜெய்சங்கர்
- ரமேஷ் பொக்ரியால்
- அர்ஜுன் முண்டா
- ஸ்மிருதி இரானி
- ஹா்ஷ வர்தன்
- பிரகாஷ் ஜவடேகர்
- பியூஷ் கோயல்
- தர்மேந்திர பிரதான்
- முக்தர் அப்பாஸ் நக்வி
- பிரஹலாத் ஜோஷி
- மகேந்திரநாத் பாண்டே
- அரவிந்த் சாவந்த்
- கிரிராஜ் சிங்
- கஜேந்திர சிங் ஷெகாவத்