ETV Bharat / bharat

மேற்கு வங்க இடைத்தேர்தல் - மம்தாவின் கோட்டையை மீண்டும் அசைக்குமா பாஜக?

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

Mamta
author img

By

Published : Nov 25, 2019, 11:27 AM IST

Updated : Nov 25, 2019, 12:43 PM IST

மேற்கு வங்க மாநிலத்தின் கலியாகஞ்ச், கரிம்பூர், காரக்பூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வெள்ளோட்டமாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.

கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப்பின் மாநிலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், இந்த இடைத்தேர்தல் பெறும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது. மம்தாவின் கோட்டையான மேற்கு வங்கத்தில் பாஜக இந்தளவுக்கு ஊடுருவியுள்ளதை மம்தாவே எதிர் பார்க்கவில்லை.

தேர்தல் வாக்குப்பதிவு காட்சிகள்

வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது அசைத்துப் பார்க்க வேண்டும் என பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு திரிவதால், தற்போதைய இடைத்தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கலியாகஞ்ச், காரக்பூர் தொகுதிகளில் திறமை மிகுந்த தலைவர்களை பாஜக முன்னிறுத்தியுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்தத் தேர்தல் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அக்னிப் பரீட்சையாகவேப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தொடங்கியது அமெரிக்கா - தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை!

Last Updated : Nov 25, 2019, 12:43 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.