உத்தரப் பிரதேச மாநிலம் பருகாப்பாத்திலிருந்து ஜெய்ப்பூர் நோக்கி 45 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று கனாவூச் அருகே உள்ள ஜி.டி ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக எதிரே வந்த சரக்கு வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிது.
இதில், பேருந்தில் எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலரது உடல் முழுவதும் எரிந்துள்ளதால், அவர்களை டி.என்.ஏ. டெஸ்ட் மூலமாகதான் அடையாளம் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த காயமடைந்தவர்கள் திர்வா மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கான்ப்பூர் காவல் ஆணையர் மோகித் அகர்வால் கூறுகையில், “21 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். பேருந்தும் சரக்கு வாகனமும் மோதியதில் பேருந்தின் டீசல் டெங்கில் தீ பற்றி எரிந்திருக்ககூடும்” எனத் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம், பலத்த காயமடைந்தவருக்கு ரூ. 50ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க...நீதிபதிகளை நியமிக்கக் கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியல்