கேரள மாநிலம், திரிச்சூர் பகுதியில் உள்ள குரஞ்சேரி சாலையில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வடக்கஞ்சேரி காவல் துறையினர், இறந்த பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செவ்வாய் கிரகத்தில் உப்பு தண்ணீர் உருவாக வாய்ப்பு - ஆய்வறிக்கை தகவல்!