சதாரா (மகாராஷ்டிரா): பிபிஇ உபகரணங்கள் அணிந்து நகைக்கடையில் நடந்த கொள்ளைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரோனா ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டு, நகைக் கடையில் நுழைந்து அலமாரியிலிருந்து நகைகளை எடுக்கும் கொள்ளையர்கள் தொப்பி, கையுறை, முகமூடி, தனிநபர் பாதுகாப்பு உடை ஆகியவை அணிந்துகொண்டு இருந்துள்ளனர்.
தோராயமாக 780 கிராம் நகைகளை திருடியுள்ளனர். நகைக் கடையின் சுவற்றை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்ததாக நகைக் கடையின் உரிமையாளர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளை தற்போது காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.