இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் எதிரொலியாக அம்மாநிலத்தில் சோலன் பகுதியில் நேற்று மாலை அடுக்குமாடி தாபா கட்டடம் இடிந்து விழுந்தது.
அப்போது இந்தக் கட்டடத்தின் உள்ளே 30 பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் இருந்துள்ளனர். இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியர்களை மீட்க தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். தற்போது வரை 12 பாதுகாப்புப் படையினர் உள்பட 13 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.