ETV Bharat / bharat

புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு! - முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை 'வெற்று காகித' பட்ஜெட் எனக்கூறி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வெளிநடப்பு

புதுச்சேரி : முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை 'வெற்று காகித' பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்துள்ளன.

opposition-parties-walk-out
author img

By

Published : Aug 28, 2019, 1:39 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடருக்கான மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. புதுச்சேரி மாநிலத்தின் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி 2019 - 20ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள எட்டாயிரத்து 425 கோடிக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சியினர், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கடிதம் குறித்து பிரச்னையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர் பட்ஜெட் உரையின்போது கடந்த மூன்று ஆண்டு காலமாக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாத காங்கிரஸ் அரசை கண்டித்தும், இந்த பட்ஜெட் வெற்று காகித பட்ஜெட் எனக் கூறியும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தன. இதற்கிடையே தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் உரையாற்றினார்.

புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேசுகையில், காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு முழுமையான பட்ஜெட் சமர்ப்பிக்காமல் ஆண்டுதோறும் இடைக்கால பட்ஜெட் சமர்ப்பித்து வருகிறது. இது மக்களை ஏமாற்றும் வேலை. முழுமையான பட்ஜெட் போடாததால் எந்த ஒரு உருப்படியான திட்டங்களையும் அரசு செய்யமுடியவில்லை. ஆண்டின் மூன்றாவது மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டிய பட்ஜெட்டை எட்டாவது மாதத்தில் சமர்ப்பிப்பது, நிதி ஆண்டில் முதல் ஐந்து மாதங்களுக்கான வருவாய் இழப்பு வெளிப்பாடு.
மேலும், இலவச அரிசி உள்ளிட்ட மக்கள் நலத் திட்ட உதவிகளை உரிய காலத்தில் வழங்க இந்த அரசு தவறிவிட்டது. சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதும் இல்லை. ஒட்டுமொத்தத்தில் அனைத்து துறைகளிலும் காங்கிரஸ் அரசு தோல்வி கண்டுள்ளது என்றார்.

Intro:புதுச்சேரியில் 2019 20 ஆம் ஆண்டுக்கான ரூபாய் 8 ஆயிரத்து 425 கோடி க்கான நிதி நிலை அறிக்கையை முதல் நாராயணசாமி இன்று தாக்கல் செய்தார் நிதிநிலை அறிக்கை ஒரு வெற்று காகிதம் பட்ஜெட் உரை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தனர்

Body:புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கான மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியது புதுச்சேரி மாநிலத்தின் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் நாராயணசாமி 2019 20 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள 8425 கோடிக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்து வருகிறார் முதல்வர் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிலையில் எதிர்க்கட்சியினர் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கடிதம் குறித்து பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர் பின்னர் பட்ஜெட் உரையின் போது கடந்த மூன்று ஆண்டு காலமாக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த காங்கிரஸ் அரசை கண்டித்தும் இந்த பட்ஜெட் வெற்றி பட்ஜெட் என்று கூறி அதிமுக பாஜக என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர் இதற்கிடையே தொடர்ந்து முதல் அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் உரையாற்றி வருகிறார்

வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேசுகையில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு முழுமையான பட்ஜெட் சமர்ப்பிக்காமல் ஆண்டுதோறும் இடைக்கால பட்ஜெட் சமர்ப்பித்து மக்களை ஏமாற்றும் வேலையை ஆளும் காங்கிரஸ் செய்து வருகிறது என்றும் முழுமையான பட்ஜெட் போடாததால் எந்த ஒரு உருப்படியான திட்டங்களையும் இந்த அரசு செய்யமுடியவில்லை ஆண்டின் மூன்றாவது மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டிய பட்ஜெட்டை எட்டாவது மாதத்தில் சமர்ப்பிப்பது நிதி ஆண்டில் முதல் ஐந்து மாதங்களுக்கான வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் ஏற்கனவே மாநில திட்டக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகை ரூபாய் 8 ஆயிரத்து 425 கோடி என அறிவித்ததுடன் அனைத்து துறைகளுக்கும் இவ்வளவுதான் நிதி என்றும் கூறிவிட்டார்கள் கடைசியாக ரூபாய் 267 கோடி பற்றாக்குறை என்றும் அறிவித்துள்ளார்கள் என கேள்வி எழுப்பினார் எதற்கு இந்த பட்ஜெட் என்றும் மக்களை ஏமாற்ற கண்துடைப்புக்காக இந்த பட்ஜெட் முறை தேவை என்றார்

இலவச அரிசி உள்ளிட்ட மக்கள் நலத் திட்ட உதவிகளை காலத்தோடு வழங்குவது இந்த அரசு தவறிவிட்டது சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதும் இல்லை ஒட்டுமொத்தத்தில் அனைத்து துறைகளிலும் காங்கிரஸ் அரசு தோல்வி கண்டுள்ளது என்று குற்றம்சாட்டினார் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை அரசு நிர்வாகத்தை நடத்துவதில் முழுமையாக தோல்வி கண்ட அரசால் சமர்ப்பிக்கப்படுகின்றன இந்த பட்ஜெட் ஒரு வெற்று காகிதம் எனக்கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக அவர் பேட்டியின் போது இதனை தெரிவித்தார்

Conclusion:புதுச்சேரியில் 2019 20 ஆம் ஆண்டுக்கான ரூபாய் 8 ஆயிரத்து 425 கோடி க்கான நிதி நிலை அறிக்கையை முதல் நாராயணசாமி இன்று தாக்கல் செய்தார் நிதிநிலை அறிக்கை ஒரு வெற்று காகிதம் பட்ஜெட் உரை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.