ETV Bharat / bharat

'எல்லை விவகாரத்தில் பாஜகவுடன் துணை நிற்போம்' - மாயாவதி உறுதி! - தற்சார்பு இந்தியா மத்திய அரசு

டெல்லி: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எல்லை விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவுடன் துணை நிற்கும் என அக்கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

BSP
BSP
author img

By

Published : Jun 29, 2020, 5:34 PM IST

இந்திய - சீன எல்லை மோதல் விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவுக்கு உறுதுணையாக நிற்கும் என அக்கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் மாறி மாறி குறை கூறி அரசியல் செய்யக் கூடாது எனவும், இது அபாயகரமான போக்கு எனவும் மாயாவதி தெரிவித்தார்.

அதேவேளை இந்த எல்லைப் பிரச்னையில் மட்டும் கவனம் செலுத்தி, நாட்டு மக்களின் நலன்களை மறந்துவிடக் கூடாது என கேட்டுக்கொண்ட மாயாவதி, பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு, மக்களுக்கு பெருஞ்சுமையை ஏற்படுத்தியுள்ளது எனக் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை மத்திய அரசு விரைந்து திரும்பப்பெற வேண்டும் எனவும், காங்கிரஸ் செய்த தவறையே பாஜக தொடராமல் உண்மையான தற்சார்பு இந்தியாவை பாஜக தலைமையிலான மத்திய அரசு உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'சோனியா காந்தி உண்மையை கூற வேண்டும்'- சிவ்ராஜ் சிங் சவுகான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.