உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 22ஆவது லீக் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் நிகழும் அபாயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தப் போட்டி நடைபெறுவதால் இதற்கு உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு உண்டானது. இந்நிலையில் இந்தப் போட்டியை இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அமிர்தசரஸில் உள்ள காசாவில் பார்த்து ஆரவாரம் செய்தனர்.
இதேபோல் இமாச்சலப் பிரதேசத்தில் இந்திய அணியின் ரசிகர் ஒருவர் காட்டின் நடுவில் பழங்களை பறித்துக் கொண்டு கைபேசியில் உலகக் கோப்பை போட்டியை பார்த்து மகிழ்ந்துள்ளார்.