ETV Bharat / bharat

எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிடும் பாதுகாப்புப் படைத் தலைவர்! - எல்லை பாதுகாப்பு படைத் தலைவர்

அகமதாபாத்: இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு நிலவரங்களை எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் எஸ்.எஸ். தேஸ்வால் பார்வையிடுகிறார்.

S Deswal S S Deswal visit S S Deswal on gujarat visit BSF chief Border Security Force எல்லை பாதுகாப்பு படைத் தலைவர் எஸ் எஸ் தேஸ்வால்
எஸ் எஸ் தேஸ்வால்
author img

By

Published : Jun 13, 2020, 10:52 AM IST

இந்தோ - திபெத் எல்லை காவல் படைத்தளபதி எஸ்.எஸ். தேஸ்வால், பி.எஸ்.எஃப். எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைவராக தற்காலிகமாக நியமனம்செய்யப்பட்டுள்ளார்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட பின்பு, கட்ச் பகுதியில் அமைந்துள்ள எல்லைப்பகுதிகளை முதன்முறையாக அவர் பார்வையிடுகிறார்.

நேற்றை முன்தினம் பூஜ் பகுதியைச் சென்றடைந்த அவர், எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களுடன் கூட்டம் ஒன்றை ஏற்பாடுசெய்து அதில் கலந்துகொண்டதாகவும் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்களுடன் கலந்துரையாடியதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், நேற்றைய தினம் பாதுகாப்பு நிலவரங்களைப் பார்வையிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் பார்வையிட்ட இடத்தில் கடந்த காலங்களில் பாகிஸ்தான் மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களின் படகுகள் பறிமுதல்செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா அமைச்சருக்கு கரோனா; பீதியில் அரசியல் பிரமுகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.