மத்தியப் பிரதேசத்தின் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அதற்கானத் தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
மாயமான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் பெங்களூருவிற்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு, மாநிலத் தலைவர் பதவி வழங்கலாம் எனக் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதனிடையே, மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல் நாத் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மாநிலங்களவைத் தேர்தலை பொறுத்தவரை பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கட்சித் தாவி வாக்களித்தால், இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சி வெல்லும். ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை அதற்கு எட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தேவைப்படுகிறது.
இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக சார்பில் களம் காணும் வேட்பாளர்கள் யார்?