புதுச்சேரி மாநிலம், வீராம்பட்டினம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஐந்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென படகில் ஏதோ மோதியதில் துளை ஏற்பட்டது. இதன் வழியாக கடல் நீர் படகிற்குள் உள்புகுந்தது.
இதையடுத்து மீனவர்கள் படகை, உடனடியாக கரைக்குத் திருப்பினர். புதுச்சேரி காலாப்பட்டு அருகே வந்த மீனவர்களை, அங்குள்ள மற்ற மீனவர்கள் மீட்க முயன்றனர். ஆனால், கரையின் ஓரத்தில் வந்தபோது, படகின் இன்ஜின் திடீரென பழுதாகி நின்றது. மேலும், கடல் நீர் அதிகமாக உள்புகுந்ததால் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு இரண்டாக உடைந்தது.
நல்வாய்ப்பாக படகில் பயணித்த அனைவரும் மீட்கப்பட்டனர். மேலும், அரசு உடனடியாக தங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.