விறகடுப்பில் வேகவில்லை எனில் பல வீடுகளில் உணவில்லை. நவீன இந்தியாவில் உள்ள பல வீடுகளின் நிலை இதுதான். வளர்ச்சியின் பாதையில் இருக்கிறோம் என மார்தட்டி கொள்ளும் இந்தச் சூழ்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் 12.7 வீடுகளில் விறகடுப்பு சமையல்தான் நடைபெறுகிறது. 76ஆவது தேசிய கணக்கெடுப்பின்படி, கிராமங்களில் உள்ள 18.4 விழுக்காடு வீடுகளில் விறகடுப்பில் தான் சமையல் செய்கிறார்கள். கிராமங்களின் நிலை மோசமாக இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
நாடு முழுவதும் 31.2 விழுக்காடு வீடுகளில் விறகடுப்பை பயன்படுத்தி தான் சமையல் செய்கிறார்கள்.
சமையலுக்காக விறகடுப்பைப் பயன்படுத்தும் மாநிலங்களின் விவரங்கள்:
ஆந்திரா - 12.7 விழுக்காட்டினர் விறகடுப்பைப் பயன்படுத்துகின்றனர்.
தெலங்கானா - 4.9 விழுக்காட்டினர் விறகடுப்பைப் பயன்படுத்துகின்றனர்.
கர்நாடகா - 16.2 விழுக்காட்டினர் விறகடுப்பைப் பயன்படுத்துகின்றனர்.தமிழ்நாடு - 8.4 விழுக்காட்டினர் விறகடுப்பைப் பயன்படுத்துகின்றனர்.
சமையலுக்காக கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் மாநிலங்களின் விவரங்கள்:
ஆந்திரப் பிரதேசம் - 81.3 விழுக்காட்டினர் காஸ் சிலிண்டரைப் பயன்படுத்துகின்றனர்.
தெலங்கானா - 90.7 விழுக்காட்டினர் காஸ் சிலிண்டரைப் பயன்படுத்துகின்றனர்.
கர்நாடகம் - 81.4 விழுக்காட்டினர் காஸ் சிலிண்டரைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்நாடு - 86.7 விழுக்காட்டினர் காஸ் சிலிண்டரைப் பயன்படுத்துகின்றனர்.
நாட்டிலேயே தெலங்கானா மாநிலத்தில்தான் அதிக அளவில் காஸ் சிலிண்டர் பயன்படுத்துகின்றனர். நாட்டின் 61.4 விழுக்காடு வீடுகளில், காஸ் சிலிண்டர் பயன்பாடுதான் உள்ளது.
சமையலுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் குடும்பங்களின் விவரம்:
ஆந்திராவின் நகர் பகுதி - 11.9 விழுக்காட்டினர் சமையலுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்றனர்.
தெலங்கானாவின் நகர் பகுதி - 7.7 விழுக்காட்டினர் சமையலுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்றனர்.
சமையலறை இருக்கும் வீடுகளின் விவரம்:
ஆந்திரா - 67.5 விழுக்காடு குடும்பத்தினர் சமையலறையைப் பயன்படுத்துகின்றனர்.
தெலங்கானா - 63.9 விழுக்காடு குடும்பத்தினர் சமையலறையைப் பயன்படுத்துகின்றனர்.
கர்நாடகம் - 79.3 விழுக்காடு குடும்பத்தினர் சமையலறையைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்நாடு - 76.8 விழுக்காடு குடும்பத்தினர் சமையலறையைப் பயன்படுத்துகின்றனர்.
நாட்டில், 60.2 விழுக்காடு வீடுகளில் சமையலறை தனியாக இல்லை. கேரளாவில் 37.8 விழுக்காடு மக்கள் விறகடுப்பில்தான் சமையல் செய்கிறார்கள். ஆனால், 96 விழுக்காடு வீடுகளில் சமையலறை என்று தனியாக உள்ளது. இதில், பெரும்பாலான வீடுகள் கிராமங்களில்தான் உள்ளது. பல வீடுகளில் மாட்டுச்சாணத்தை எரித்து சமையலுக்காகப் பயன்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க: 'ஆண்டி முதல் அரசாட்சி வரை' - இது நித்தியின் தாண்டவம்!