நாடு முழுவதும் 17ஆவது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில், பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி,
'மக்களவைத் தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, பெரும்பான்மையான இடங்களை பாஜக கைப்பற்றியது. இதன் மூலம், பாஜக மீது மாநிலக் கட்சிகள் தொடுத்த தாக்குதல் முடிவடைந்துவிட்டது.
எதிர்காலத்தில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று யாரேனும் சூளுரைத்தால், அதில் மதிப்பு இருக்காது' என நான் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.