இந்திய - சீன எல்லை மோதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கையை காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்துவருகின்றனர். மோதல் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்களையும் அவர்கள் எழுப்பிவருகின்றனர்.
இந்நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறுகையில், "இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் தவறான அறிக்கைகளை வெளியிடுவதோடு, புத்தியில்லாமல் கேள்விகளையும் எழுப்பிவருகின்றனர்.
நாள்தோறும் யாராவது ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள். இந்திய நிலத்தில் ஒரு அங்குலத்தைக்கூட சீனாவிடம் நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் தொடர் கேள்விகள் மூலம் மானத்தை விட்டுக்கொடுத்துள்ளார்கள்" என்றார்.