வாரணம் ஆயிரம், பொல்லாதவன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக இருந்து வருகிறார்.
வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தொடங்கவுள்ள நிலையில் பாஜக கட்சி ஃபேஸ்புகில் 'என் முதல் ஓட்டு மோடிக்கு' (first vote for modi) என்று ஒரு பக்கத்தை(page) உருவாக்கி அதில் பதக்கம், டி-சர்ட்கள், ஃபோன் கவர்கள் மற்றும் தொப்பி போன்ற பொருட்களை narendramodi.in என்னும் இணையதளத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி முதல் முறை வாக்காளர்களை சமூகவலைதளங்கள் மூலம் பாஜக தன் வசம் ஈர்ப்பதாக புகார் கூறி தலைமை தேர்தல் ஆணையத்தில் திவ்யா ஸ்பந்தனா கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், இதுகுறித்து உடனடியாக ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து, அந்த பக்கத்தையும், இணையதளத்தையும் முடக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் திவ்யா வலியுறுத்தியுள்ளார்.