மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அவ்வழியே சென்று கொண்டிருந்த மூன்று பேரை திருடர்கள் என சந்தேகித்து அப்பகுதி மக்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா ஊரடங்கை சாதகமாகக் கொண்டு திருடர்கள் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியில் வதந்தி பரவியதையடுத்து, மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்று கொண்டிருந்த மூவரை அக்கிராமத்தினர் பலத்த ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். சம்பவம் அறிந்து காவல்துறையினர் அங்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதற்குள் பரிதாபமாக மூவரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இதுபோன்ற இக்கட்டானத் தருணத்திலும் நம் வரலாற்றிலேயே மிக மோசமான அரசியலை ஆளும் பாஜக அரசு செய்து வருகிறது என வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் புதிய அந்நிய முதலீட்டு விதிமுறைகள் WTO கொள்கையை மீறுகிறது - சீனா