மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாநிலகளவை எம்பியும், நடிகையுமான ரூபா கங்குலியின் மகன் ஆகாஷ் முகர்ஜி. இவர் நேற்றிரவு கொல்கத்தா கோல்ஃப்கிரீன் பகுதியில் காரில் வேகமாக வந்துள்ளார். இதில் நிலைதடுமாறிய கார், கோல்ப் கிளப்பின் சுவரின் மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் ஆகாஷ் முகர்ஜிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.
![விபத்து ஏற்படுத்திய பாஜக எம்பி மகன் கார்...!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4149884_bjp.jpg)
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர் மது அருத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.