இதுகுறித்து நிசாமாபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் தருமபுரி அரவிந்த் பேசுகையில், "நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் இம்மாவட்ட பெயரை இந்தூர் என மாற்ற வலியுறுத்திவருகின்றனர். நிசாமாபாத் என்ற பெயர் மங்களகரமாக இல்லை என்று அவர்கள் கருதுவதே இதற்கு காரணம்.
மாவட்டத்தின் பெயரை மாற்றினால் அதன் தலையெழுத்தையே மாற்றலாம் என்று நினைக்கிறார்கள். 1905ஆம் ஆண்டிற்கு முன்னாள் இப்பகுதியின் பெயர் இந்தூர். இது சத்தியம். இப்பகுதிக்கு நிசாமாபாத் எனப் பெயர்வைத்தவர் ஒரு நிசாம். இங்கு ஒரு அணை மற்றும் தொழிற்சாலையைக் கட்டினார்.
ஆனால், தற்போது அந்த அணையில் நீரும் இல்லை, தொழிற்சாலையில் யாரும் வேலை செய்வதும் இல்லை. மாவட்ட பெயரை மாற்ற சரியான காலத்தை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நிசாம் பெயர் வைத்த அனைத்து இடங்களின் பெயர்களையும் மாற்ற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக தெலங்கானா மாநில பாஜக தலைவர் கே. லக்ஷ்மணிடம் கேட்டபொழுது, " இதுபற்றி எந்த ஆலோசனையும் நடக்கவில்லை’ என்றார். எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையே கடந்தமுறை நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் நகரின் பெயரை பாக்யநகர் என்று மாற்றப்படும் என அக்கட்சி தலைவர் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.மேலும், உத்தரப் பிரதே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒருமுறை ஹைதாரபாத்துக்கு வந்தபோது இந்நகரின் பெயர் பாக்யநகர் என்று மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.