பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்யும் பணி இன்று தொடங்கியது. இப்பணியை மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர், பாஜக எம்பி ஹேமமாலினி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தை பாஜக எம்பிக்கள் சுத்தம் செய்து குப்பைகளை அகற்றினர். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எம்பி ஹேமமாலினி, தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக சுத்தம் செய்யும் பணியை நாங்கள் தொடக்கி வைத்திருக்கிறோம். இதனை சபாநாயகர் பாராட்டியுள்ளார். அடுத்த வாரம் எனது தொகுதியான மதுராவிற்கு செல்லவிருக்கிறேன், அப்போது இத்திட்டத்தை அப்பகுதியில் செயல்படுத்துவேன் என்றார்.