மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஆதரவு தெரிவித்து ஆறு அமைச்சர்கள் உள்பட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜீ தாண்டன், அம்மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, இன்று காலை கூடிய சட்டப்பேரவையில் பேசிய அவைத் தலைவர் பிரஜபதி, கோவிட்-19 (கொரோனா) வைரஸ் பாதிப்பு காரணமாக சட்டப்பேரவையை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை காலதாமதமின்றி உடனடியாக நடத்த அவைத் தலைவருக்கு உத்தரவிடும்மாறு உச்ச நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது.
இதையும் படிங்க : 'கொரோனா வைரசை எதிர்கொள்ள இந்தியாவுடன் பயனுள்ள ஆலோசனை' - அமெரிக்கா