மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நில ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நில ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக சொல்லப்பட்ட இடத்திற்கு விசாரணை நடத்த மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர். இதனையடுத்து மேற்கு வங்க பாஜகவின் முக்கிய பிரமுகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆகாஷ் விஜய்வர்கியாவின் மகனும் அப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது, விசாரணை செய்துகொண்டிருந்த மாநகராட்சி அலுவலரை ஆகாஷ் விஜய்வர்கியா கிரிக்கெட் மட்டை வைத்து தாக்கியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கிரிக்கெட் மட்டையால் ஆகாஷ் விஜய்வர்கியா மாநகராட்சி அலுவலரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.