ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் ஹோபன் ஹெம்பர்க். இவர் ஜாம்ஷெட்பூர் மாவட்ட பாஜக பழங்குடியின பிரிவுத் தலைவராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் ஹோபன் ஹெம்பர்க்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.