பிகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் பதவிக்காலம் நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
7.29 கோடி வாக்காளர்களைக் கொண்டுள்ள அம்மாநிலத்தின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர், நவம்பர் ஆகிய இரு மாதங்களில் மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் தலைமையிலான மகா கூட்டணியும், முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் நேருக்கு நேர் அரசியல் சண்டையிட உள்ளன.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான மகா கூட்டணியில் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ (எம்), சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக கூட்டணியை வீழ்த்துவது ஒன்றே இலக்காகக் கொண்டு இந்த மகா கூட்டணி இணைந்து பணியாற்றுவது மக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
அதே நேரத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி குறித்து பல கேள்விகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், தற்போது இந்த கூட்டணி தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.
பிகார் அரசியலில் நீண்ட காலமாக எதிரெதிர் நிலைகளில் நின்றிருந்த எல்.ஜே.பி மற்றும் ஜே.டி.யு ஆகிய இரண்டு கட்சிகளும் தற்போது என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருப்பதை சந்தர்ப்பவாதமாக கருதுவதாக அரசியல் விமர்சனம் எழுந்துள்ளது.
பிகாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் (ஜே.டி.யு) அம்மாநிலத்தில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருக்கிறது. ஆனால், எல்.ஜே.பி. மத்திய அரசின் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது.
பாஜகவின் இயல்பான நட்பு சக்தியாக கருதப்படும் எல்.ஜே.பி. மத்திய அரசின் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., ராம் மந்திர், முத்தலாக் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அரசுக்கு ஆதரவளித்துள்ளது. ஆனால், ஜே.டி.யு., இந்த சட்டங்களையும் திட்டங்களையும் பல சந்தர்ப்பங்களில் எதிர்த்துள்ளது.
லோக் ஜனசக்தி கட்சி பாஜகவுடனான அதன் கூட்டணி இயற்கையானதாக மக்கள் கருதத் தொடங்கிவிட்டனர். அதே நேரத்தில் ஜே.டி.யுவின் பாஜகவுடனான கூட்டணி சந்தர்ப்பவாதமானதாகவே அறியப்படுகிறது.
சட்டப்பேரவையில் பாஜக கூட்டணி வென்றால் நிதீஷ் குமாரே மீண்டும் முதலமைச்சராக்கப்படுவார் என பாஜக மேலிடம் அளித்த வாக்குறுதியே பாஜகவுடனான அவர்களின் கூட்டணிக்கு முக்கிய காரணமென மக்கள் அரங்குகளில் பேசப்படுகிறது.
பிகாரில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநிலத்தின் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை மக்கள் எழுதவுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இந்துஸ்தானி ஆவாம் மோர்சா, லோக் ஜனசக்தி ஆகியவற்றுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் மோதல்கள் வெடித்திருந்தது கவனிக்கத்தக்கது.