மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பாஜக சதி திட்டம் தீட்டிவருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்துவருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஆதீர் ரஞ்சன் சௌத்ரி, “பாஜக ஒரு அரசியல் வேட்டைக்காரன். சட்டப்பேரவை உறுப்பினர்களை மிரட்டி தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியிருக்கின்றனர்” என்றார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக் விஜய் சிங்கும் பாஜக மீது இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “சுயேச்சை, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை பாஜக மிரட்டுகிறது” என்று ட்வீட் செய்திருந்தார்.
230 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு 2018ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் 114 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றியது. ஆளும் கட்சியாகத் திகழ்ந்த பாஜகவுக்கு 109 தொகுதிகள் கிடைத்தன. இதையடுத்து சமாஜ்வாதி (2), பகுஜன் சமாஜ் (1), நான்கு சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது நினைவிருக்கலாம்.
இதையும் படிங்க: கிரிப்டோகரன்சி தடை நீக்கம்!