மேற்குவங்க மாநிலம் 24 பாராகான்ஸ் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடந்த பேரணியில் அக்கட்சியின் வளர்ந்துவரும் தலைவர் கனையா குமார் கலந்துகொண்டார். இவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட பாஜகவினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இந்தச் சுவரொட்டிகளில் கனையா குமாரை மிகவும் கேவலமாக விமர்சிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சுவரொட்டிகள் ஓட்டியதாகப் பாஜக ஆதரவாளர்கள் சிலரை கைதுசெய்தனர்.
இது குறித்து மாவட்ட பாஜக தலைவர், “அரசியலில் எதிரிகளை விமர்சித்து சுவரொட்டிகள் ஓட்டுவது என்ன குற்றமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பிரெக்ஸிட்: ராணி எலிசபத் ஒப்புதல்!